Friday, June 25, 2010

அப்பா செய்தி பேப்பரில் மூழ்கி போயிருந்தார் ...
மூக்கு கண்ணாடி ..முன் தலை வழுக்கை சகிதம் அப்பா 55 ஐ கடந்திருந்தார்.... கிச்சனில் பாத்திரத்தை உருட்டும் சத்தம்...
"எல்லா வேலையையும் நான் ஒருத்தியே செய்யவேண்டிருக்கு ....
நமக்குன்னு ஹெல்ப் பண்ண யாரும் இல்லை ... "
அம்மா நான் ஏதாவது பண்ணனுமா....?
நீ ...." "உண் வேலையை சரியா பார்த்த போதும்....
கிளம்பும் போது ஷு எங்கே ,சாக்ஸ் எங்கேன்னு ...
என்கிட்ட கேட்காமல் இருந்தா சரி.....
உன்னோட டிபன் பாக்ஸ் அங்க வச்சிருக்கேன்...
எடுத்து பேக்ல வச்சிக்கோ ...மீதி வைக்காமல் சாப்பிடனும்....
உங்க அப்பா வேலைக்கு கிளம்பலையான்னு கேளு ....,
பேப்பரை படிச்சி என்ன பண்ண போறாரோ தெரியல ....? "
அப்பா ..."
"என்னடா வாசு..."
"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...."
அப்பா பேப்பரை மடித்து வைத்து விட்டு ...
"சொல்லு வாசு ஆபிஸ்ல ஏதாவது சொன்னங்களா ....?"
நான் ஏதாவது சொல்லனுமா..?
அது இல்லபா ...வாசு நிறையவே தயங்கினான் ....
வாசு நீ தடுமாடுரத்தை பார்த்தா நாங்க பயபடுரமதிரி ஏதோ சொல்ல போறேன்னு நினைக்கிறேன் .....
இருந்தாலும் சொல்லு ..."
"அம்மா நீங்களும் வாங்க ....."
வாடி ...இங்க உட்கார் ...உண் பையன் ஏதோ சொல்ல போறான் ....
மனசை திட படுத்திக்கோ ..."
"வாசு ....நீ பயப்படாதே ....'அம்மா உண் பக்கம் இருக்கேன்
உங்க அப்பாவுக்கு பயப்பட வேண்டாம்...."
அம்மா அப்பாவை பார்த்து சிரிக்க .... வாசு வாய் திறக்க ....
"வெயிட் வாசு.... நீ என்ன சொல்ல போறேன்னு நான் சொல்லவா ...?
"அப்பா விளயாடதீங்கபா ...."?
"ஐயோ வாசு எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு....?
என்னங்க அவனை சொல்ல விடுங்களேன் ...."
"இருடி ...அவன் சொல்றதுக்கு ஒரு வாரம் ஆகும்...."
"வாசு ...அப்பாகிட்ட சொல்லிடியா "
"இல்லமா...." "ஏன் வாசு உண் ஆபிஸ்ல ஏதாவது பொன்னை லவ் பண்றியா ...?"
"வாசு ..அப்பா என்னடா சொல்றார் நிஜமடா...?"
"அவர் சொல்றது கொஞ்சம் உண்மைதான்....."
"அப்படினா .....?அப்பா அவன் அருகில் தோளில் கை போட்டவர் ....
"வாசு நீ லவ் பண்றே....புரியுது ...யாருன்னு சொல்லு....?
இந்த விஷயத்துல ..நான் உண் பக்கம் இருக்கேன் அம்மாவுக்கு பயப்பட வேண்டாம்....
"அப்பா அம்மாவை பார்த்து சிரிக்க ..
அம்மா முறைத்தாள் ....
"அப்பா நான் சொல்லிடுறேன்....."
வீடு முழுவதும் நிசப்தம் நிலவ ....
அம்மா ,அப்பா ஒருவரைஒருவர் பார்த்துகொண்டார்கள் ....
"பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மலரை லவ் பண்றேன்.....
"இதை நான் எப்போவோ சொல்லிருக்கலாம்...
உங்க ரெண்டு பேருக்காகத்தான் யோசிச்சேன்...."
அம்மா வேக மாய் கிச்சனுக்குள் போய்விட்டாள்.....
குழப்பத்தோடு அப்பாவை பார்த்தான் வாசு.....
அம்மா திரும்பி வந்தாள் ...
"வாசு ஆ சொல்லு...." "எதுக்குமா ...?"
"வாயை காட்டு சொல்றேன்....."அவன் வாயில் சர்க்கரை போட்டாள் "அப்பா ...அம்மாவுக்கு என்னாச்சி...?
வாசு....போன வாரம் தான் உன்னையும் அந்த பொண்ணையும் பற்றி ...பேசிட்டு இருந்தோம்....
இப்போ நீயே சொல்றே....?
அதான் உண் அம்மாவுக்கு சந்தோஷம் தாங்க முடியல...."
ஆனாலும் வாய் பேச முடியாத ,காது கேட்காத பொண்ணுக்கு வாழ்க்கை தரதுக்கு பெரிய மனசு வேணும் ...
அது என் பையன்கிட்ட இருக்குன்னு நினைக்கும் போது...
பெருமையா இருக்குதுபா ..வாசு...."அப்பா வாசுவை கட்டி கொண்டார்... "தேங்க்ஸ் பா ..."
"நான் கூட சின்ன வயசுல இருந்து மலர் கூட இருந்திருக்கேன்....
அப்போ எனக்குள்ளே காதல் இருந்தான்னு தெரியலபா ....?
"....பட் போன மாதம்
..அவள் இல்லாத அந்த முப்பது நாட்கள் தான்பா ..
என் மனசுல மலர் இருக்கிறாள் ன்னு புரிஞ்சிக்கிட்டேன்....
லைப் புல்லா அவள் கூட நான் இருக்கனும்பா ....."
"டோன்வோர்ரி வாசு ....
நீ போய் மலர் கிட்ட உன்னை பற்றி சொல்லு...இப்பவே .... போ .."
"ஆல் தி பெஸ்ட் வாசு...."வாசல் வரை போனவன் ...நெகிழ்ந்து போனான்....
ஓடி வந்து அம்மாவை கட்டி கொண்டான்.....
"தேங்க்ஸ்மா .....".....
2...
"வாசு எங்கே .. போய்ட்டீங்க .....?ஆபிஸ் போகவில்லைன்னு அம்மா சொன்னங்க ....?"
""உங்களுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்ணினா தெரியுமா...?
"மலர் எங்கே....காணவில்லை....?"
"மலர் பீச் க்கு போயிருக்காள்...."
"தனியாகவா.....?வாசுக்கு ஆச்சரியமாய் இருந்தது.....""
"ம்ம் நீங்க இல்லை....போய்ட்டாள் ....:
"ஒகே கவிதா நான் போய்பார்கிறேன்....
" அவ்ளோ கூட்டத்தில் அவளை கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் வாசு....? "நான் இப்போவே மலரை பார்க்கவேண்டும்....."
கடற்கரை........லேசான மழை பெய்ய ...
அதையும் பொருட்படுத்தாமல் நிறைய காதலர்கள்...
கூட்டம் அதிகமாகவே இருந்தது......
மலர் தனியாக வந்திருப்பது மனசுக்கு நெருடலாகவே இருந்தது "மிஸ்டர் ...வாசு...." திடுக்கிட்டு திரும்பினான் ....
"நான் தான் வாசு நீங்க....?
அழகாய் ......தெரிந்தான்
"என் பேரு கெளதம் ....வாங்க வாசு பேசிகிட்டே போகலாம்....."
"எங்கே சார் ...அதுமில்லாம நீங்க யாருன்னு தெரியலியே...?"
"பிரெண்ட்ன்னு நினைச்சிக்கலாம்.....
பை தி பை ...நீங்க யாரையோ தேடறீங்க ன்னு நினைக்கிறேன்...."
கோபம் வந்தது...பேசாமல் நின்றான்.....
"மிஸ்டர் வாசு....மலரை தேடுறீங்க ன்னு எனக்கு தெரியும்....
மலர் உங்களை கூடிட்டு வர சொன்னாள்ன்னு சொன்னால் வருவீங்க ...
சோ கம் வித் மீ ....திரும்பாமல் சொல்லிவிட்டு முன்னால் நடக்க குழப்பத்தோடு பின் தொடர்ந்தான்......
மழையோடு தென்றலின் தீண்டல் தேகத்தை நடுங்க செய்தது போகும் திசையில் மலர் அமர்ந்திருந்தாள்......
அலைகளையே பார்த்துகொண்டிருந்தாள்.....
மலர் அழகானவள்
குறைகளை யாரிடமும் காட்டிக்கொள்ள விரும்பாதவள்
....ஓடி போய் அவளெதிரில் விழுந்தான்....
திடுக்கிடாள்....
கோபித்தாள்....
தலை முடியை கலைத்தாள்
..சட்டையை பிடித்து...இழுத்தாள்.....
வாசு நிலைகுலைந்து போனான்....
காலுக்கு கீழே பூமி நழுவியது போலிருந்தது....
அடியெடுத்து வைக்க கால்கள் அடம்பிடித்தது.....
கெளதம் ஆட்காட்டி விரலை நீட்டி வாசுவை காடினான்....
மலர் கண்களில் ஆச்சரியத்தையும்,சந்தோஷத்தையும் ஒரு சேர பார்த்தான்.... வாசு...
ஓடி வந்து.....வாசுவின் கைகளை பிடித்து இழுத்து சென்றாள்.....
கெளதமை காடினால்...
இது வரை பார்க்காத ....வெட்க ரேகைகள்....
பூவின் மேல் பனித்துளியை போல ...
அவள் முகத்தில்...மழை துளிகள்.....
வாசு,கெளதம் கொட்டும் மழையில் நனைந்துகொண்டு அமர்ந்திருக்க
நிறைய பேச துடித்தாள்........
கெளதம் பேசினான்...
முதன்முதலா கோவில்தான் பார்த்தேன்....
ஆனா இவள் என்னை முறைத்தாள்...
அவள் கொஞ்சமா சிரிக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்....
இன்னொரு நாள் கவிதா என்கிட்ட பேசினாள்...
இவளுடைய குறைகளை சொன்னாள்....
எனக்கு அது பெருசா படவில்லை...
எப்போ வரட்டும்...
அம்மா,அப்பாவோடு...உங்க வீடுக்கு ன்னு கேட்டேன்....
ஏதும் பேசாமல் ,சிரிசிகிட்டே ஓடி போய்ட்டாள்...
இன்றைக்கு உங்க முன்னாடி இருக்கோம்....
வாசு...மலர் உங்களை மனசுக்குள்ளே எங்க வச்சிருக்காள்ன்னு தெரியுமா....?அம்மா,அப்பா வுக்கு அடுத்த ஸ்தானத்தில்
எனக்கு உங்க மேல அளவு கடந்த மரியாதை வந்தது...
அது வரைக்கும்...நான் ஒரு சாராசரி மனுஷனாதான் யோசிச்சி வச்சிருந்தேன்...
உங்களை சந்திக்க ஆசை பட்டேன்....
மலர் இன்னைக்கும் தனியாதான் வந்தாள் ....
உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் வாசு..."
கெளதம்...இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை தரத்துக்கு ஒரு பெரிய மனசு வேணும் அது உங்க கிட்ட இருக்கு....
சோ...உங்களை சந்திச்சதில் நான்தான் சந்தோஷ படனும்...." "வாசு.....எதையுமே எதிர்பாரமல் வருவது ப்ரெண்ட்ஷிப் மட்டும்தான்...
ஒரு ஆணும் ,பெண்ணும்....nalla நண்பர்களா இருக்க முடியும்ன்னு நீங்க நிருபிசிருகீங்க ...வாசு...
உங்க ப்ரெண்ட்ஷிப் முன்னாடி என்னோட காதல் ஒன்றுமில்லை ....
கெளதம் யாதர்தமாய் சொன்னது நெத்தியடியாய் இருந்தது...
"ஏன் கெளதம் மழைல நனைந்துகொண்டே காதல் போராட்டமா.....?" இல்ல..வாசு...மலர்க்கு இந்த மழை பிடிச்சிருக்கு...

Tuesday, June 22, 2010

புற்களுக்கு பனித்துளிகள் சுமையாகுமா ?........
கிளைகளுக்கு இலைகள் சுமையாகுமா ?........
உன் பாதங்களுக்கு கொலுசு சுமையாகுமா ?........
அழகுக்கு ,அழகு சேர்க்கும் ......உதட்டோர மச்சம் சுமையாகுமா ?........
உன் பெயருக்கு பக்கத்தில் என் பெயரை கிருக்குவதில் .....
விரலுக்குதான் வலிக்குமா ?......
உனக்காக காத்திருந்த ..நிமிடங்கள் ....திரும்ப கிடைக்குமா ?
நீயும் நானும் பேசிய ரகசிய பாஷைகள் ...இருளுக்கு புரியுமா ?
குளித்து முடித்தும் என் அருகில் வந்து தொந்தரவு பண்ணும் போதெலாம் நிலை கண்ணாடி இன் கோபந்தான் தீரூமா ?.....
எச்சில் காயாத முத்தங்கள் கணக்கில் வருமா ?
வீட்டருகே வரும்போதுமட்டும் ,உன் கொலுசு பழுது ஆகிவிடுமே ........
இப்போதாவது.......சரியாகிவிட்டதா ?........
நான் கடைதெருவுக்கு செல்லும் போதெல்லாம் ..........
உன் பேனாவின் மை திர்ந்துவிடுமே ...... ?
கன்னத்தில் பருக்கள் வரும்போது .....
வேணுமென்றே ..... சந்தேகம் கேட்பாயே ........சந்தேகம் தீர்ந்து விட்டதா ?சிறிதும் வெட்கப்படாமல் .......
கனவில் வந்து போனதைஎன்னிடமே சொல்லிவிட்டு ஓடிபோவாயே ......?கனவுகள் வருவதில்லையா ......இல்லை ..அதில் நான் வருவதில்லையா ?
உன் பார்வைக்கு அர்த்தம் கேட்டால்........இது கூட தெரியாதா?என்று ,தலையில் அடித்துவிட்டு வலியை போக்குவதாக ...
தடவிக்கொண்டே இருப்பாயே.......?
வலி போய்......ஆசை தீ பற்றி கொள்ளுமே........?
பற்றி கொண்டதுமே ....நடுங்கியவாறு விலகி போவாயே ?
நீ வாங்கிவந்த ஆடையை அணிய வேண்டும்மென அடம்பிடிப்பியே.....
அணிந்தவுடன் ....சிரித்துகொண்டே அழுவாயே....மறக்க முடியுமா?.......
மழை நீரில் நனைந்து இர விழிகள் படபடக்க ...
கேட்காமல் தேநீர் கொடுக்கும் உன்னை.......
என்னவென்று சொல்வது ............?அம்மவுக்குதெரியாமல் ....தலைதுவட்டும்போது ......
கண்களையே பார்த்துகொண்டிருப்பாயே ......
அர்த்தம் தெரிந்துதான் பார்த்தாயா?இல்லை ........உனக்கும் தெரியாதா?
கருப்பு பொட்டு வைக்கும்போதெல்லாம் .......
நான்தான் உனக்கு நிலை கண்ணாடியோ ??
தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தபோது .....
பரிசு கேட்டாயே....தரும்போது .....வாங்காமல் ........
குனிந்த தலை நிமிராமல் .........
மவுனமாய் ......கால்லால்....கோலம் போட்டாயே ?
நீ எதிர்பார்த்த பரிசுதான் என்ன ?நான் கேட்ட போது ....
வினாடி கூட யோசிக்காமல்.....
நீ தந்துவிட்டு ஓடி போன எச்சில் பரிசை மறக்க முடியுமா
நீயும் நானும் வெகுதூரம் நடக்க ......திரும்பி பார்த்தபோது ...
இருவர்வரை தவிர யாருமே இல்லையே........?
நம் இருவற்காக .....அதேபோல் ஒரு உலகம் வேண்டும் என்றாயே .......?கடலும் அதை ஆமோதித்தது .......இருவருக்குமே கால் வலித்தபோது ...உன்னை மட்டும் ...தூக்க சொல்லி அழுதாயே ?
நான் பயந்தபோது .....இங்கே யாருமே இல்லை..என்று ...
நம் தனிமையை மறுபடியும் ......உணர்த்தினாயே......
நான் அருகில் வந்த போது .....பிடிக்க சொல்லி ஓடினாயே ......வேண்டுமென்றே ....மெதுவாக ஓடி என்னிடம் மாட்டிகொண்டாயே ?
விழிகள் படபடக்க ....இதழ்கள் ஆசையில் தேன் ...
வடிக்க நான் கொடுத்த முதல் முத்தம் .......
மறுநாள் ....காய்ச்சலில் படுத்துக்கொள்ள .......
அருகே கூபிட்டு நான் கொடுத்ததை எனக்கே தந்தாள் .......
சின்னதிரை மெகா தொடர் போல நீண்டுகொண்டே போகும் உன் நினைவுகள்................
உண் நினைவால் நான் சிந்தும் கண்ணிர்த்துளிகளிலும் பௌர்ணமியாய் உன் முகம்.........
நினைக்க சொல்லிகொடுதவளே............
உன்னை மறக்க சொல்லி கொடு..........
பட்டுபோன என்னை உன் கைகளால் வெட்டி சாய்த்துவிடு........

Monday, June 21, 2010

அவள் வீடு

வரிகள் போதவில்லை ............
கவிதைகல் இலவசம்.........
பாதைகள் நீண்டுகொண்டே போக நடையில் ஏக்கம் .............
அருகிலே அவள் வீடு ..........
இரவை தொலைத்து விட்டு விடியல் வந்தது ....
ஆனந்தத்தில் துளசி செடி .............
இரவில் மனப்பாடம் செய்த நாபகம் ....
காலையில் அவளெதிரில் ஊமை ....
உள்ளங்கையில் வைத்து தாங்குகிறேன்......
உள்ளங்கையில் கிறுக்கலாய் அவள் பெயர் ....
வானத்து பந்தல் தாள்வாய் தெரிந்தது ......
அவளை பார்க்கும் ஒவ்வொரு தருணமும் தொட்டு விட்டு வந்த நாபகம் ....
விடியற்காலையில் ஏதோ சாதித்து விட்ட சந்தோஷம் ....
கனவில் உன் விரலை தொட்ட போது .....
சொல்லிக்காமல் வருவதும் .......
சொல்லிக்கொள்ளாமல் போவதும் கனவுக்கு புதிதல்ல .....
நிஜத்தில் நீ பார்த்தும் பாராமல் செல்வது.....
ஏதோ மழைக்கு ஏங்கிய செடியை போல் ....
பட்டு பொய் மடிய காத்திருக்கிறேன்.....
கனவுகள் தேங்கி போனது .....இரவுகள் பற்றாகுறை.......
நிமிடங்கள் கரைகின்றன .....ரம்மியமான மாலை நேரம் .....
நான் தொலைத்த அந்த சிரிப்பை ....அவளிடம் பார்த்தேன் ......
மூடி வைத்த காதல் அழுதது ........
விழியோரம் கசிந்தது கண்ணீர் ........
நிறைமாத கற்பிணிபோல் நிற்கிறேன் .....
நெஞ்செங்கும் பரவிகிடக்கும் உன் நினைவுகள் ......

இப்படிக்கு....

நேற்றைய தோழா ......
உன்னை என்னவென்று எழுதுவது ......
யோஸித்ததில்.....நேரங்கள் கரைகிறன ...
பள்ளிக்கு புறப்படும் போதெல்லாம் எனக்காக ...காத்துநிற்கும் உன்னை ...நீ போ...என்றபோது .....நீயும் வா ....என்று அடம் பிடித்ததையா ....
மல்லிகை பூ...பிடிக்கும் என்றேன் ......
பிறந்தநாள் பரிசாக ....நீ தந்த மல்லிகை கன்று ....
ஜோடி மீன்களை வாங்கி வந்து ...
நம் இருவருடைய பெயரை..மீன்களுக்கு சூட்டினையே ....
மழைக்கு ஒதுங்கிய நேரம் .....
குளிரில் நான் ......பார்த்தும் பாராமல் நீ .....
விழிகள் சிறகை படபட அடித்துக்கொள்ள .....
இதயம் துடிக்க மறந்து செயளிலன்த்து போக .....
இரண்டு பேருக்கு இடம் விட்டு நின்ற உன்னை என்னவென்று சொல்வேன் .....
எதாவது சொல்லி அடிக்கடி வெட்கப்பட வைக்கிறாயே .......
அதையும் ...தலை சாய்த்து அழகாய் ரசிக்கிரையே ...
மணிகணக்கில் நிலை கண்ணாடி முன் நிற்கிறேனே ...
எதிரில் நான்தான் என்று தெரிந்தும் ......
தொலைந்து போன கொலுசை தேட மனம்மில்லாமல் ....
நீ அருகில் நின்றுகொண்டிருந்தாலும் மனம் உன்னையே தேடுகிறது .......
வாசலில் உன்னை கண்டதும் .....
கதவுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறேன் ....
சரி வா என்று கையை பிடித்த போது ......
அம்மா உன்னை தனியாக போக சொன்னதும் ....
கண்ணீர் மல்க சென்றாயே .......
அல்லிப்பூ ஒன்று பூத்தது உனக்கு தெரியாதா.......?

என் இரவுகள்.......

இலை நுனி விழும்பில் விழ காத்திருக்கும் பனித்துளி ..........
தூங்குமூஞ்சி மரங்கள் ....கண்விழிக்கவில்லை .......
காலை தென்றலில் குளிர் மிச்சமிருந்தது .........
சூரியன் உதித்தபிறகும் போக மனமில்லாத நிலா ......
மேகங்கள் இலவம்பஞ்சாய் ...ஆங்கங்கே ...பரவிகிடக்க .......
மயானத்தில் பூத்த பூக்கள் ...உதிரப்போவது தெரியாமல் .........
தனிமை என்னை கொல்கிறது.............
இலக்கே தெரியாமல் நடக்கிறேன் ....பாதைகள் தொடர்கிறது ...
ஆவலோடு ஏமாற்றமும் .....ஓட்டிகொள்கிறது ........
மறக்க நினைத்த தருணங்கள் ....உன் நினைப்பில் கரைகிறன ......
என் பெயரை எழுத்தும் போது.....
மறந்தோ ,தெரிந்தோ ...கூடவே உன் பெயர் .....
இரவு பகலாகிறது ......இமைகள் முட தோன்ற வில்லை ....
எதிரில் உன் பிம்பம் ......
விட்டு சென்று வருடங்கள் கடந்திருந்தாலும் .......
இன்றும் தெரு முனையில் காத்திருக்கிறேன் .......
காத்திருப்பில் ...தெரிகிறது காதலின் உச்சக்கட்டம் ........
பாதி கிழிந்து தொங்கிய சுவரொட்டியை போல் ......என் இதயம் ......
நீ விட்டு சென்ற நினைவுகள் ....
இன்னும் தெரு முனையை கடக்கவில்லை ......
ஏனோ நம்பிக்கை ...இன்றும் வராத நீ ...
நாளை வருவாய் என ....
ஒவ்வொரு விடியலுக்காக காத்திருக்கும் என் இரவுகள் .......

மரணமே என்னை அணைத்துகொள்........

தென்றலுக்கு தூது அனுப்பினேன்.........
உன்னை வருடிவிட்டு சென்றதா .......
ஆமை போல் ஊர்ந்து சென்ற மேகத்திடம்......
நான் சிந்திய கண்ணீர்துளிகள் ......மேக மழை சிந்தியாதா ........
வெட்க்கத்தில் சிவந்திருந்தது காலை சூரியன் .....
உன்னை சந்தித்ததால் சின்ன மாற்றமோ .......
ஏக்கத்தில் பாதியாய்...உருகி போனது பால்நிலவு .....
என்னை போலவே .........நீ எந்த லோகத்தில் இருக்கிறாய் .....
யாரை அனுப்புவேன் தூது சொல்ல ......
பூட்டிய அறைக்குள் தவம் இருக்கிறேன் .......
அவ்வப்போது வந்து சென்ற மேகத்திடம் பதில் இல்லை ....
ஊர்ந்து சென்ற மேகங்கள் ....காணாமல் போய்விட்டன .....
கோபத்தில் சுட்டெரிக்கும் காலைசூரியன் .....
ஜன்னல் கம்பிகளில் தங்கிய மழை துளி ....சோகத்தில் .....
இறுதிவரை உன்னை காணாத ஏக்கத்தில் அமாவாசை இரவு .....
இரவில் பூத்த பூக்கள் அனைத்தும் கல்லறைக்கே சென்றன .....
இரவானால்....இறந்துவிடுகிறேன் ......
விடிந்ததும் விளித்துகொள்கிறேன்.......
மரணமே என்னை அணைத்துகொள்........
மேக ஊர்வலமே ......என்னவளிடம் .....கூட்டிசெல்......
இருண்டு போன என் உலகில் ...
வின்மினி பூச்சிபோல் புள்ளியாய் அவள் நினைவுகள் ..........

சில கனவுகள்....

சட்டை பையில் சில கனவுகள் ..............
நெஞ்சினில் தூங்காது உன் நினைவுகள் ........
கண்கள் உடைபட்ட அணைகள் ........
நான் நடக்கும் பாதையெங்கும் தனல்கள்.......
உண்மையை மறைக்கிறேன் ......
உணர்ச்சியை ..கொல்கிறேன்......
இரவை பகலாக்கினேன்
கனவு காண்கின்றேன்
திரணியற்று நிற்கிறேன் .....
துரத்தும் உன் நினைவுகள் ........
இதயத்தில் வைத்துக்கொண்டே .....
உன்னை ......தேடிதிரிகின்றேன் .......

அவள் நினைவுகள்

நிஜத்தில் அத்தனையும் பொய் என்று தெரிந்த பின்பும் ......
பொய்யான கனவு உலகில் நிஜமான இரவுகள்...
இரவு என்னை அணைத்து கொள்கிறது.
கனவு உலகிற்கு கூட்டி செல்கிறது.......
சொர்க்கத்தின் விழும்பில் நின்று கொண்டுநரகத்தை ரசிக்கிறேன் .....
ஏனோ விடியலை பிடிக்கவில்லை ......
விடியலின் அழகை ரசிக தோன்றவில்லை...
கனவுகள் புகை மண்டலமாய் தெரிந்தாலும்...
நேரம் கடந்து வரும் என்னவள் பௌர்ணமியாய்
நெருங்க முடிய தருணத்திலும் கண்ணடிக்கும் விண்மீன்கள்....
எனக்கு மட்டும் கனவுகள் இலவசம்......
விடியல்கள் விற்பனைக்கு......
அவள் பெயர்தான் என் நூலகம்.....
இளமை இளகி போனது........
உருவம் உருக்குலைந்து போனது....
தேகம் தேய்ந்து போனது....
போனவயது திரும்ப வில்லை...
நெஞ்சம் கனக்கிறது....
இதயத்தில் அவளும் அவள் நினைவுகளும்......

அவள்

ஈரம் காயாத உதடுகள் .....
ஆளை தின்னும் விழிகள் .....
வினா எழுப்பும் புருவங்கள் ......
தோல்வி கண்டிராத ஸ்டிக்கர் பொட்டு......
இறந்து போன சிற்பி செதுக்கிய முக்கு .....
குண்டு குளியோடு இரு கன்னங்கள் .....
காது மடல் உரசி செல்லும் கூந்தல்.....
வரம்பு மிறிய கழுத்து சங்கிலி .....
இரவில் பூத்த ரோஜா அவள் பின்னலில்....
திருஷ்டி பொட்டு போல கன்னத்து பருக்கள் ....
அவள் நடந்து வந்த பாதையெல்லாம் தவம் செய்திருந்தது ........
கூந்தலில்ல்ருந்து தவறிய மல்லிகை பின்சிகள்.....சொர்க்கத்திற்கு சென்றன ......
அவள் தேகம் தொட்ட மழை துளிகள் ....பரிசுத்தமாகின......
இரவில் நிலா கோபத்தில் ......பவர்ணமி....போல் உன் முகத்தை பார்த்து ......
தேவதைகள் அதிசயத்து போனார்கள் ....உன் வருகைனால்...........
சூரியன் மேகத்து போர்வைக்குளே.......
என்னவள் ...இன்னும் கண்விழிக்கவில்லை .....

Sunday, June 20, 2010

இன்றும் உனக்காகவே.........

மாலை நேரம் சின்ன அதிசயம்.....
துவானம் முத்தமிட ....அவளின் தரிசனம்......
பல மாத தவத்திற்கு பிறகு ....
கூந்தலிருந்து எனக்காக தவறிய மல்லிகை ....
உன் நிழல் கூடவே நடந்து ...
சந்தோஷபட்ட நாட்கள் ........
தோள்கள் உரசிக்கொள்ள ....ஏங்கிய தேகம்......
நடு இரவில் ஒத்திகை பார்த்துக்கொண்ட
கேவலமான இரவுகள் ......
காலையில் பூத்த பூக்கள் வாடி போயிருக்க ....
மாலையிலும் ....காலையில் பூத்த பூவாய்...
மலர்ந்திருக்கிறேன் உனக்காக .........
உன் தோழியிடம் நலம் விசாரித்து .....
உன்னை பற்றி விபரம் அறிந்து ......
உனக்காக வாங்கி தர நினைத்து ....
தராமல் என்னிடமே வைத்துக்கொண்ட ...
பாரதியார் கவிதைகள் .......
நண்பன் சொன்ன அறிவுரை ...
நான்காய்,எட்டாய் மடிக்கபட்ட
காதல் கடிதம் சட்டை பையில்....
வருடி சென்ற கடல் காற்று.........
கடல் அமைதி காக்க .....
இதயத்தின் ஓசை ....அனைவரையும் ..
திரும்பி பார்க்க வைத்து போல் பிரம்மை ..
தோழிகளோடு நடந்து சென்றாலும் .....
கோடி கால் தடத்தின் ....நடுவே .....
அழகாய் உன் கால்தடங்கள் ......
உதடுகள் தந்தியடிக்க ....
கால்கள் மண்ணில் புதைந்து கொள்ள ...
தேகம் வெட்டி போட்டத்தை போல் துடிக்க .....
முதுகில் வியர்வை துளிகள் ....ஊசியாய் குத்த ....
மெல்லமாய் கூபிட்ட போது .....அவள் திரும்பவில்லை
அவள் பெயரை வீசிய காற்று ...கொண்டுபோனது
இதுதான் என் கடைசி நாளாய் நினைத்துக்கொண்டு
அவள் எதிரில் நான் ..ஏதேதோ சொல்லி கடிதத்தை நீட்டி ..
அதை அவள் பல துண்டுகளாய் ...கிழித்து...
முகத்தில் எரிந்தது ..அத்தனையும் கனவாய் இருக்ககூடாதா ..... ?
அவமானம் ஒட்டிக்கொள்ள ...
.ஓடிபோய் அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதது ....
பொய்யான காரணத்தை சொல்லி கதறி அழுதது ...
மறுநாள் விடியலும் அழகாகவே இருந்தது அவளை போலவே ...
புதிதாய் மீண்டும் காதல் கடிதம்....
ஐந்து நாட்கள் தாடியோடு....
பழக்கபட்ட பேருந்து நிறுத்தத்தில் .....
இன்றும் உனக்காகவே.........
தொடாமலே ஸ்பரிசத்தை உணர்கிறேன்.....
இதழ் பதிக்காமல் ...கள்ளுரும் கன்னங்கள்...
இமை மூடும் போதெல்லாம்....
புதுபுது கனா காண்கிறேன்...
உன் விரலை பற்றிகொண்டு..
யாரும் இல்லாத ஊரில் ....
தோளோடு தோள் உரசிக்கொண்டு...
உனக்கும் எனக்கும் தெரியாது ...
நாம் எங்கே போக வேண்டும் என்று
உன்னை நேரில் காணும் போதெல்லாம்.....
போனா நிமிடமும்....அடுத்த நொடியையும்....
மறந்துவிடுகின்றேன்...
பூட்டிய அறைக்குள்...
நிலை கண்ணாடி முன் நின்று ....
ஏதேதோ பேசி ஒத்திகை பார்கிறேன்....
வீசிய வாடை காற்றில் ....
தேகமெங்கும் பட்டுபூச்சிகளின் ஊர்வலம்..
ஜன்னல் வழியாய் ஊடுருவிய தென்றல் .....
குண்டு ஊசியாய் குத்தியது...
அம்மா அப்பா கோவிலுக்கு கூட்டிசென்றாலும்
சாமியிடம் உனக்காக மட்டுமே வேண்டுகிறேன்.....
கண்ணு தெரியாத பாட்டியிடம்....
நான் ஆடிய பரதநாட்டியம்......
கைதட்டல் கேட்டு திரும்பிய
என் விழிகளும்...தேகமும் ...
வெட்க்கத்தால்
வெடவெடத்து போனது உன்னை பார்த்து....
மூடி வைத்த காதல் பூத்து கொலுன்கியது....
வாடாது காத்திருக்கு....உன் தீண்டலுக்காக ....
நிலவை தொலைத்த அமாவாசை..இரவில் ...
உன் நினைவுகளோடு ......
என் பௌர்ணமி கனவுகள்.....

முற்று புள்ளி .......

அன்புள்ள சித்ரா என்று ஆரம்பித்து .....
அதற்க்கு மேல் எழுத தெரியாமல்.....
பல்லால் பேனாவை செல்லமாய் கடித்துகொண்டேன் .....
வார்த்தைக்கு பஞ்சமாகிபோனது ....
ஜன்னலருகே அமர்ந்த போது ...
முகவரி தெரியாத தென்றல் முத்தமிட்டு சென்றது
இமை மூடி ...யோசித்தேன் ....
சில வருடங்கள் முன்பு ....
இதே திருவிழா காலம்
எல்லா வீடு சுவர்களுமே பளிச்சென்றிருந்தது
தெரு கோடியில் போய் நின்றிருந்தேன் .....
நகத்தை கடித்து துப்பிய போது பின்னந்தலையில் யாரோ அடிக்க திரும்பினேன்....
அப்பா நின்றிருக்க .....இங்க என்னடா பண்றே .....
திருதிருன்னு விழித்தேன்....
என்னடா ஆச்சி உனக்கு ...?
அத்தை ,மாமா 2 மணிக்கு வரதா சொன்நீங்களேபா....வரலை....?
அது விடியற் காலை 2 மணிக்கு....வா இங்கல்லாம் இப்படி நிற்க கூடாது....
நீ சாப்டியா ...?இல்லை என்று தலையாடினேன். ....வா போகலாம் என்றார்...
வீடிற்கு போய் சாப்பாடு எதிரில் உட்கார்ந்து கொண்டு ....எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருக்க ....
டேய் உனக்கு பிடிச்சதுதான ....அப்புறம் ஏன் சாப்பிடாமல் இருக்கே....? அம்மா புரியாமல் கேட்டாள்...
அப்பா வாயில் சோற்றோடு ..ம்ம் சாப்பிடு என்றார் ....தங்கை சாப்ட்டு முடித்திருந்தால்.....
"நான் என்னோட ரூமுக்கு போறேன்...."
"இது என்னடா புது பழக்கம்....."
"அவனை விட்றி நீ போடா...." ஆனா ஒன்னு விடாமல் சாப்டனும்
அப்பா வந்து பார்ப்பேன்.. ம் போ "
என் அறைக்கு போய் சாப்பிட பிடிக்காமல் .....
காலையே சுற்றி சுற்றி வந்த நாய் குட்டிக்கு சாப்பிட சொல்லிவிட்டு...
ஓடிபோய் என் ஸ்கூல் பேக்ஐ திறந்து
என்னுடைய 2 ஆம் கிளாஸ் பாடப்புத்தகத்தை திறந்து
நடு பக்கத்தில் இருத்த அந்த புகைபடம்....
இமையாது பார்த்தேன்.....
1 வது படிக்கும் போது சித்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைபடம்
பளபளக்கும் பச்சை கலர் பாவாடை ,
அத்தையின் தங்க சங்கிலி.....
காது வரை புன்னகைத்தாள்....
நான் அவளையே பார்த்துகொண்டிருந்த புகைபடம்...
அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டு புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ...
நாயை விரட்டி சோற்றை மேசை மீது வைத்துவிட்டு ...
தண்ணீர் குடித்துகொண்டே ....
"என்னப்பா "....
அப்பா என்னை தாண்டி சோற்றை பார்த்தார்....
" ம் இன்னும் கொஞ்சம் தான் இருக்கு சாப்டுறு...."
"சரிப்பா "
அப்பா போய்விட , நாய்க்கு சோறை வைத்துவிட்டு...
கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தேன்.....
இப்போதே படுத்தத்தான் சித்ரா வரும் போது முழிச்சிருக்க முடியும்....
வெகு நேரத்திற்கு பிறகு தூங்கிபோனேன்....
விழித்த போது அருகில் அழகான பொம்மை....
புரியாமல் கடிகாரத்தை பார்த்து திடுக்கிட்டு போனேன்....
5 .25 சித்ரா வந்தாச்சா.....
இது எனக்காக வாங்கி வந்தா பொம்மையா ..?
பொம்மையிடம் ஏதேதோ பேசிவிட்டு
ஹாலில் பேச்சி சத்தம் கேட்க
ஓடி போனேன் ....அம்மா நின்றிருந்தால் ....
அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டு ...
மெல்லமாய் சித்ராவை பார்த்தேன்....
அவள் சிரித்தாள் .முகத்தில் வெட்கம் படர மீண்டும் ஒளிந்துகொண்டேன்....
அம்மா என்னிடம் குனிந்து "அத்தை .மாமா எப்போ வந்தீங்க ன்னு கேளு...."
நான் வெட்கப்பட ....அம்மா தலையில் கொட்டினாள்
விடுமா சின்ன பயனுக்கு என்ன தெரியும்.....
"காபி வச்ச்ருக்கேன் போய் குடி.... போ "முறைத்தபடி சொன்னாள்....
"2 மணிக்கு வருவாங்கன்னு எனக்குத்தான் தெரியுமேமா ... ?"
"டேய் போ போய் முகத்தை கழுவிட்டு வா...." அப்பா சொல்ல......
"நீ ஏன்மா என்னை எழுப்பலை ம் ?"
"என்ன சொல்றான் உன் பய ...ம்?"
"ஒன்னும் இல்ல அண்ணி...."
நீங்க வரும்போது நான் அவனை எளுப்பலையாம்?"
"ஆமா பெரிய மனுஷன் ..உடனே ஸ்டேஷனுக்கு வண்டி கொண்டு வந்திருப்பான்...".
ஹ ஹ அஹ ஆஹா எல்லோரும் சிரிக்க ....
எதுமே கேட்க வில்லை....சித்ரா சிரிப்பது போல கேட்டது ...
ஆனால் அவள் சிரிக்கவில்லை.....
முகம் கழுவ போனேன்....ஏதோ யோசித்தேன்....
ஆடையை களைந்து குளித்தேன்.....ஏனோ குளிர்ந்த நியாபகம் இல்லை....
யாரோ கதவை தட்ட "அம்மா டவல் கொண்டு வா "என்றேன்....
மீண்டும் தட்ட ....
திறந்தேன் அம்மா .....நின்றிருந்தாள் ....கூடவே சித்ரா ...
"என்னம்மா இது ?"இவள் இங்க ஏன் வந்தாள்..."
நான் உன்கிட்ட தான் டவல் கேட்டேன்...."?
உன்னை எத்தனை தடவை சொல்றது குளிக்கும் போது டவல் கட்டிகொன்னு ம் "?
நீ டவல் கேட்டது ..என்கிட்ட இல்ல சித்ரா கிட்டத்தான் அதான் கொண்டு வந்திருக்காள் " ?
வேகமாய் டவலை கட்டிகொண்டேன்.... ....
சித்ரா சிரிக்க......எனக்கு கேட்கவில்லை.......
வெகு நேரம் கழித்து......
சித்ரா வாங்கி வந்தா பொம்மை எனக்கு இல்லையாம்....
தங்கச்சிக்காக .....அவள் அதை பிடுங்கிக்கொண்டால் அழுதேன்....
"நீ என்ன சின்ன பையன்னா ம்....?"அப்பா உனக்கு துப்பாக்கி வாங்கித்தரேன்.....குடுத்துரு "
அதை வச்சி உங்களை சுடனும்....."என்றேன் அம்மா அடித்தாள் அழுதேன் ....
அடித்ததற்காக அழவில்லை......
மறுநாள் திருவிழா கூட்டத்தில் நானும் சித்ராவும் துலைந்து போனோம் .....
அவள் எனக்காக வாட்ச் .கண்ணாடி ,மோதிரம் மிட்டாய் வாங்கித்தந்தாள்....
நீ எது வாங்கி தர மாட்டியா என்றாள்.....
பணம் இல்லையே என்றேன்.....
உன்கிட்ட ஏதாவது இருக்கா..?
இல்லை....
சரி வா வீடுக்கு போகலாம் என்றாள் .....
ஒரு வாரம்.....கழித்து ஊருக்கு போனாள்....
அழுத படி பிரிந்தோம்.....
ஆறேழு வருடம் கழித்து போன வருடம் வந்தாள் .....
அதிகம் பேசி கொள்ளவில்லை.....
ஆனால் பார்த்தாள்.....
நான் இல்லாத நேரம் பார்த்து....ஊருக்கு போய் விட்டாள்....
இந்த முறை....எனக்காக ஏதும் தரவில்லை.....
இருந்தாலும்.....நிலை கண்ணாடியில்
அவளின் ஸ்டிக்கர் பொட்டு.....
நான் போடும் சொப்பில் இரண்டு கூந்தல் முடி.....
மறந்து விட்டுவிடு போன டிஸ்கோ ரப்பர் ....
வேற ஏதும் விட்டுவிட்டு போகவில்லை......
"வீட்ல யாருமா கூரியர் வந்திருக்கு....."
அம்மா வாங்கி வந்தாள்.....
"என்னவாம்....."அப்பா கேட்க ....
சித்ராவுக்கு கல்யாணமாம் .....
உங்க அக்கா மெட்ராஸ் வர சொல்லிருக்காங்க ...."
கண்கள் குளமாகி.......... ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் .....
அன்புள்ள சித்ராவுக்கு பக்கத்தில் முற்று புள்ளியாய் விழுந்தது.....





இத்த்துடன்
முடித்து கொள்கிறேன்
அன்புடன்
ஆசிர் ...

விடுகதை விழிகளே

என் கருவறை விழிகளுக்கு .....
உன் இமை காவலன் எழுதுவது......
கவிதை அருவி போல் உன் கூந்தல் ....
அதில் பூத்திருக்கும்...கனகாமரபூக்கள்.......
எட்டாவது வண்ண வானவில்லாய் உன் கரும் புருவங்கள்.....
விண்மீன்கள் பூக்கவில்லை ....வானத்தில்.....
மின்னுதே உன் கன்னத்து பருக்கள்.....
சிற்பிகளின் அற்புத படைப்பு உன் அழகான மூக்கு ...
ஆர்ச்சரிய குறி போல் உன் நெற்றி பொட்டு...
இரட்டை சகோதரிகள் போல ...உன் காது சிமிக்கி ...
சாயம் பூசாமல் சிவந்திருந்த உதடுகள்.......
சங்கு போல் இல்லை உன் கழுத்து ......
புன்னகைத்தால் மட்டுமே தெத்து பற்களின் அறிமுகம்....
இடை தெரியாமல் அணைத்திருக்கும் புடவை ...
தொட்டதும் கன்னிபோகும் ...பிஞ்சி கரங்கள்....
திரும்பி பார்க்கவைக்கும் உன் வளையல் ஓசை
மலர் தூவ வேண்டும் உன் பாதத்திற்கு .....
கட்டளை போட்டது உன் கால் கொலுசு ....
விடுகதை விழிகளே ....தூங்கிவிடாதே ....
இமைக்காமல் காத்திருக்கேன் பதில் எழுது......

கனவுகள் விற்பனைக்கு ...........

என்னங்க .. காபி ....."ஷ்யாம் கண்விழித்தான் ....
"காபிய அங்க வை.....நீ இங்க வா ..."
"முடியாது...." "நான் குளிச்சாச்சி .....
அதான் சொல்றேன்...இங்க வா....
ம்கூம்...முடியாது...ராத்திரி என்ன சொன்னீங்க ....
என்ன சொன்னேன்....?
அம்மா,அப்பாவை பார்க்க போறதா பேசிகிடோம்...?
ஆமாம் ..சொன்னேன் ..ஆனா போகவேண்டாம்....
ப்ரியா முறைத்தாள்...போய்விட்டாள்.....
ஷ்யாம் காபியை குடித்துகொண்டே ...நியூஸ் பேப்பரை விரித்தான்.....
வென்னீர் ரெடியா இருக்கு.....? கிச்சனிலிருந்து வந்தது குரல்....
பேப்பரை போடுவிட்டு....அமைதியாய் பாத்ரூம்குள் போய்விட்டன்....
குளித்துவிட்டு திரும்பி வரும்போது...ப்ரியா ஜன்னலோரம் நின்றுகொண்டிருந்தாள்
பிரியா இங்க என்ன பண்றே...ம்?
சும்மா நிற்கிறேன்.....
ஜன்னலுக்கு வெளியே எதுமே இல்லை ..சும்மா அங்கேயே வெறிச்சி பார்த்துகிட்டே இருகிறே....?கோபமா இருக்கியா ?
கொஞ்சம் வெயிட் பண்ணு ...தோ...வாறேன்.....
திரும்பி வரும்போது இரண்டு கப் காபி ....
ப்ரியா காபி சாப்பிடு ...சுகர் கொஞ்சம் கம்மியா தான் இருக்கும்....ப்ச்...காபிய குடி ப்ரியா ..பேசலாம்....பிளிஸ்...."வாங்கி கொண்டாள்....
ப்ரியா நமக்கு கல்யாணம் முடிஞ்சி வெறும் பத்து நாள்தான் ஆகிருக்கு.....
கல்யாணம் முடிஞ்ச நாள்ல இருந்து புல் டே உன்கூட நான்..இல்லை...சோ ..இன்னொரு நாள் அம்மா வீடுக்கு போகலாம்...ம்?
பிளிஸ் ப்ரியா...இன்னைக்கு நீ இந்த மாதிரி இருக்ககூடாது....ஒகே..ஏதாவது பேசலாமா....சொல்லு என்ன பேசலாம்...ம்?
ப்ரியா புன்னகைத்தாள்....காபியை குடித்துகொண்டு உதட்டை நனைத்துகொண்டாள்...
தேங்க்ஸ் ப்ரியா .....
எதுக்கு...."..."கொஞ்சம் சிரிச்சியே....?ப்ரியா வெட்க்கபட்டவள் ...
பாருங்க இந்த மாதிரி கிண்டல் பண்ணினா...நான் எதுமே சொல்ல மாட்டேன்.....
கே கே ....சொல்லு உனக்கு என்ன என்ன பிடிக்கும்.....
ம்ம்ம்... அம்மா ,அப்பா ...நீங்க ..இந்த வீடு...நம்ம கிச்சன்...இப்போதைக்கு இவ்ளோதான்...."உங்களுக்கு....?"
"ஹ ஹ ஹ இவ்ளோதான....?" "அம்மா ,அப்பா பிடிக்காதவங்க யாருமே இருக்கமுடியாது....
எனக்கு மணிரத்னம் பிலிம் ரொம்ப பிடிக்கும்...விக்ரம் பிடிக்கும்...நான் ஒரு சினிமா பைத்தியம்...
அப்புறம் என்னோட பைக் ...,இந்த வீடு ..நீ தர்ற பெட்காபி.....வீடு முழுசும் கேட்கின்ற உன் கொலுசு சத்தம்.....
ஹேய்...ப்ரியா அங்க பாரு மழை வருது.....
அதுக்கு என்ன இப்போ....ம்?
பிளிஸ் ப்ரியா ...பைக்ஐ மெதுவா ஓடுறேன்...எங்கேயாவது போய்ட்டு வரலாம்....
ஐயோ நான் மாட்டேன்பா ...இந்த ஊரு டிராபிக்ஜாம் தங்க முடியாது....அதும் இந்த மழைல...முடியாது....?
சரி ...சினிமா போகலாம்....மை பேவரைட் ஆக்டர் விக்ரம் நடிச்சது....&மணிரத்னம் மூவி ..பிளிஸ் போகலாம்...
நோ ...முடியாது...விசில் சத்தம்...இருக்க முடியாது....தலை வெடிச்சிடும்....வேண்டாங்க....
ஷ்யாம் பேசவில்லை. மீதம் இருந்த காபியை குடித்துவிட்டு. அமைதியாய் ஜன்னலோரம் போய் நின்றான்.
இப்போ மட்டும் இங்க ஏதும் தெரிதா என்ன ..?நீங்க மட்டும் இங்க வந்து நிற்கலாமா ?
கொஞ்சம் உரசாமல் நிற்கிறியா....?ப்ரியா மேலும் வேகமாக தோள் உரசினாள்....
நான் என்ன பண்றது.....எனக்கு பிடிக்கணுமே...?ஒரு பொண்டாடிக்கு என்ன பிடிக்கும்னு நீங்க தெரிஞ்சிவச்சிருக்கணும்....?
அதான் தெரியுமே.....உனக்கு பிடிச்சது உன் அம்மா வீடு....?
கோபமா இருக்கீங்களா....?கன்னத்தில் முத்தமிட்டவள் ..."நான் சொல்லவா ...?
உன்களுக்கு குக் பண்ண தெரியும்ன்னு சொல்வீங்களே...?இன்னைக்கு ஒரு நாள் நீங்க குக் பண்ணுங்க...நான் சாபிடுறேன்...ம்?
போடி என்கிட்ட பேசாதே..நான் கோபமா இருக்கேன் ....
வேற ஏதாவது கேளுங்க ...இந்த டைம் மறுக்க மாட்டேன்....
ஷ்யாம் அவளை பார்த்தான்.....ப்ரியா ரொம்ப நாளா ஒரு ஆசை....இப்போ சொல்லவா /..?
ம்...
கொஞ்சம் வெயிட் பண்ணு...ப்ரியா தோ வர்றேன்.....அறையின் வலது கோடியில் டி.வி இருந்தது...கூடவே சிடி ப்ளேயர்.....
நொடி பொழுதில்....அறையெங்கும்...மிதமான பாடல் ஓலி....
இது எந்த படத்திலிருந்து ....
ஹேய் இது கூட தெரியாதா ?....இது மணிரத்னம் மூவி....,மோகன் ,ரேவதி நடிச்சது..13 டைம் பார்த்திருக்கேன்....
பனி விழும் இரவு .....நனையிது நிலவு....பாடல் ஓலி அறையெங்கும் நிரம்பி வழிய ..."என்ன பண்ண போறீங்க ஷ்யாம்...?"
....ப்ச்..பக்கத்துல வா .... dance with me .... வா ஆடலாம்....
பட் எனக்கு ஆட தெரியாதே ஷ்யாம்...."
" நான் மட்டும் என்ன டான்ஸ் மாஸ்டரா ...இங்கிலீஷ் படம் பார்த்திருக்கியா ...?
அதில இப்படித்தான் லவ்வரஸ் இப்படிதான் காதலை வெளிபடுத்துவாங்க....."
ஆட தெரிலனா..... நோ ப்ராப்ளம் ப்ரியா...நமக்கு பிடிச்ச மாதிரி ஆடலாம்....கம் பாஸ்ட் ....
ப்ரியா அருகே வர அவளை இடுப்போரம் அணைத்துகொண்டான்....இப்படி லேசா அசைஞ்சா போதும்..ப்ரியா .....
இப்படிதான்..... தெரியாதுன்னு சொன்னே...ம்?இவ்ளோ அழகா ஆடுறே.....?
ப்ரியா அவன் விழிகள பார்த்து சொக்கி போனாள்..."ஷ்யாம் இந்த நிமிஷத்தை என்னால மறக்க முடியாது... லவ் யு ஷ்யாம்...
மீ டூ ...ப்ரியா ..யு konw ப்ரியா...இந்த பட்டை...முதன்முதலா பார்த்த போது இந்த மாதிரி டான்ஸ் ஆடனும்ன்னு நினச்சது....எவ்ளோ வருஷம் கழிச்சி... இன்னைக்கு நடந்திருக்கு பார்த்தியா ...?
ம்.....?
ஷ்யாம்..தன் இரு கரங்களால் அவள் முகத்தை ஏந்திகொண்டான்..."என் கைல ஒரு பூ பூத்திருக்கே பார்த்தியா..?
ம்...?என்றாள் ப்ரியா....
ஹேய் என்ன நீ ...எதுமே பேச மாட்டேங்கிறே....?உனக்கு பிடிக்கலியா ..?
நான் அப்படி சொன்னேனா.....?எப்போவுமே உங்க கதகதப்பான அரவனைப்புக்குள்ளே நான் இருக்கணும்...
இருக்கலாம்.....ப்ரியா ....
ஷ்யாம் செந்தில்னா...யாரு....?
தெரியாதே.. எதுக்கு...?
உங்க பிரெண்ட் எதுக்கு உங்களை செந்தில்ன்னு கூப்பிடனும்....?
ஹேய் இங்க நீயும் ,நானும் மட்டும்தான் இருக்கோம்...கதவு பூட்டி இருக்கு...?
ஐயோ அங்க பாருங்க ...நான் போறேன்.....பாய் ....
ப்ரியா ...அவன் என் பிரெண்ட் இல்லமா...?..ஐயோ அவன் கூட நான் சண்டை....பிளிஸ் ப்ரியா போகாதே....
ப்ரியாயாயாயாயாயாயா....................??????/
ப்ரியா போகும் போது கடைசியா சொன்ன வார்த்தை......?
கண்ணை நல்லா திறந்து பாருங்க .....
ஷ்யாம் கண்ணை திறந்த போது.....கையில் தண்ணீர் பாட்டலோடு நின்றுகொண்டிருந்தான் ....
என்னடா .......?
நீதாண்டா சொன்னே...?காலைல இன்டர்வியு இருக்குது....எழுப்பு...எளும்பவில்லேன்னா தண்ணீர் ஊத்த சொன்னியே ..
அதான் தண்ணி பாட்டல்.....புரியாமல் விழித்தான் நண்பன்....
உன்னை பிரெண்டா அடைஞ்சதுக்கு ....நான் ரொம்ப வருத்த படுறேண்டா.....
ஏன்டா நீ சொன்னதை தானே செய்தேன்......?
டேய் போடா நான் கோபமா இருக்கேன்.....போய்டு ....ப்ளீஸ் ...
அதுக்கு ஏன்டா கண்கலங்குறே......?

அன்புடன் ....
ஆசிர்